ETV Bharat / city

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையினர், இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ளதாகக் கூறி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை திமுகவினர் புறக்கணித்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.

DMK walks out TN Assembly
DMK leader MK Stalin
author img

By

Published : Jan 6, 2020, 11:37 AM IST

2020ஆம் ஆண்டில் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்று காலை தொடங்கியது.

ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரிலிருந்து பிரதான எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ், அமமுக, முஸ்லீம் லீக், மனித நேய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சியினர் வெளிநடப்புச் செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக சார்பில் வெளிநடப்புச் செய்துள்ளோம். தமிழ்நாட்டில் கடன்தொகை நான்கு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தொழில் வளர்ச்சி கிடையாது. புதிய வேலைவாய்ப்புகளும் இல்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென தற்போதுள்ள அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் அனுப்பிவைத்துள்ளது.

DMK walks out TN Assembly

ஆனால் இதுவரை ஆளுநரிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. நாட்டின் மதச்சார்பின்மைக்கும், அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்துள்ள நிலையில் அதிமுக ஆதரித்துள்ளது.

DMK walks out TN Assembly

தற்போது அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இலங்கைத் தமிழர்கள், சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது.

அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் ஆணையம், அரசு எந்திரங்கள், காவல் துறையினர் என கூட்டணி அமைத்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Intro:Body:

TNAssembly

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.