வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
இத்தேர்தல் முடிவடைந்திருக்க கூடிய தேர்தலாகும், வேண்டுமென்றே வீண் பழி சுமத்தி கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த எதிர்கட்சியினர் செய்த செயலால் தடைபட்டு தற்போது நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க 38 குரல்கள் நாடாளுமன்றத்தில் ஒலிக்கின்றன, அதனுடன் சேர்த்து கதிர் ஆனந்தின் குரலையும் தமிழ்நாட்டிற்கு ஆதரவு குரலாக மாற்ற நீங்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
நீட் விலக்கப்படும் என கருணாநிதியும், ஜெயலலிதாவும் கூறினார்கள் ஆனால் இன்றைய ஆட்சியில் நீட் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், அனிதா, கீர்த்தனா ஆகிய குழந்தைகளின் இறப்புக்கு காரணமாகவும் இந்த ஆட்சியுள்ளது. எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும், இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.