சென்னை: இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (ஜூலை 14) வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜூலை 16ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் இக்கூட்டம் நடக்கிறது. மேகதாது அணை விவகாரம், நீட் தேர்வு விலக்கு குறித்து நாடாளுமன்ற கூட்டத்தில் திமுக கேள்வி எழுப்ப இதில் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மேகதாது - அனைத்துக்கட்சிக்குழு நாளை டெல்லி புறப்பாடு