நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் தினக்கூலித் தொழிலாளர்கள், ஏழை எளியோர் என போதிய வருமானம், உணவு இன்றி கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் திமுக சார்பில் மாநிலம் முழுவதும் உணவுப் பொருட்களை அக்கட்சியினர் வழங்கி வருகின்றனர்.
அதேபோன்று அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் ஊராட்சியில், துப்புரவுத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஏழை எளியோர் என சுமார் 2,000 பேருக்கு பதினைந்து நாட்களுக்குத் தேவையான அரிசி, காய்கறி உள்ளிட்டவைகளை திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வழங்கினார். இதில் ஏராளமானோர் வந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவிய திமுக