ETV Bharat / city

’நாங்கள் எல்லாம் புள்ளக்குட்டிக்காரர்கள்' - கொரோனாவுக்கு பயந்த துரைமுருகன்

சென்னை: அதிகமாக ஏசி இருக்கும் இடத்தில் கொரோனா இருக்கும் எனக் கூறப்படுவதால் சட்டப்பேரவைக்குள்ளும் அனைவருக்கும் மாஸ்க் வழங்க வேண்டுமென எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

assembly
assembly
author img

By

Published : Mar 12, 2020, 5:07 PM IST

சட்டப்பேரவையில் இன்று கொரோனா குறித்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீமானத்தின் மீது பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “ கொரோனா வைரஸ் தொடர்பாக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்த வகையில் தற்போது 10 லட்சம் முகக்கவசங்களை நாம் கையிருப்பு வைத்துள்ளோம். தேவையான மருந்துகளும், மருத்துவ ஊழியர்களும் தயார் நிலையில் இருக்கிறார்கள். எனவே அனைவரும் சுய சுகாதாரத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். யாரும் அச்சப்பட வேண்டியது இல்லை “ என்றார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், ” எங்கு பார்த்தாலும் கொரோனா பயம் உள்ள நிலையில் ஒன்றும் இல்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். நாங்கள் எல்லாம் புள்ளக்குட்டிக்காரர்கள். உறுப்பினர்களுக்கு ஏதாவது ஆனால், இடைத்தேர்தலை எதிர்கொள்வது மிக சிரமம். ஏசியில் இருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் என்கிறார்கள். இங்கும் அதிகமாக ஏசி பயன்படுத்தப்படுகிறது. முதலில் இங்குள்ளவர்களுக்கு மாஸ்க் வழங்கி காப்பாற்றுங்கள் “ என்றார். அப்போது அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ 70 வயதுக்கு மேல் உள்ளவர் என்பதால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் அச்சம் கொள்கிறார். நீங்கள் அச்சப்பட வேண்டாம். தரமான மருத்துவர்கள் தமிழ்நாட்டில் உள்ளார்கள் “ என்றார்.

பேரவைத் தலைவர் தனபால் பேசும்போது, ” கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் பேரவைக்கு உள்ளேயும் மேற்கொள்ளப்படும். ஏசி அளவு குறைக்கப்பட்டுள்ளது. கைகழுவுவதற்கான சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது. மாஸ்க் தேவைப்படும்போது வழங்கப்படும் “ என்றார்.

இதையும் படிங்க: சுத்தம்தான் சுகாதாரம்; சுத்தமாக இருந்தாலே கொரோனா நம்ம பக்கத்துல வராது - யோகிபாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.