ETV Bharat / city

சிஏஏவை எதிர்த்து பேரவையில் தீர்மானம் - பேரவைச் செயலரிடம் திமுக நினைவூட்டல் கடிதம் - திமுக கடிதம்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிடக் கோரி சட்டப்பேரவைச் செயலரிடம் திமுக சார்பில் நினைவூட்டல் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

assembly
assembly
author img

By

Published : Feb 11, 2020, 1:08 PM IST

மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் ஆறாம் தேதி நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகத் தீர்மானம் கொண்டுவர திமுக வலியுறுத்தியபோதும் அது தனது ஆய்வில் உள்ளதாக பேரவைத் தலைவர் தனபால் தெரிவித்தார். நான்கு நாள்கள் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில், இறுதிவரை இந்தத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் வரும் 14ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சேகர்பாபு, மா. சுப்ரமணியன் ஆகியோர் பேரவைச் செயலரைத் தலைமைச் செயலகத்தில் இன்று காலை சந்தித்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற நினைவூட்டல் கடிதத்தை அளித்தனர்.

பேரவைச் செயலரிடம் திமுக அளித்த கடிதத்தில், ”இந்திய மக்களிடையே மத, இன ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி, இந்திய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கேள்விக்குறியாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறக் கோரி தீர்மானம் கொண்டுவந்து சட்டப்பேரவை விதியின்படி நிறைவேற்ற வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நடந்தது இருக்கட்டும்... நடக்கப்போவதைக் கவனியுங்கள்... எடப்பாடி கறார்!

Intro:Body:குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிடக் கோரி சட்டப் பேரவை செயலாளரிடம், திமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்ட திருத்ததிற்க்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குடியுரிமை திருத்தச் சட் டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வர திமுக தொடர்ந்து வலியுறுத்திய போதும், அது தனது ஆய்வில் உள்ள சபாநாயகர் தெரிவித்தார்.
4 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் இறுதிவரை இந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தெடார் வரும் 14-ம் தேதி கூடவுள்ளநிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, மா.சுப்ரமணியன் ஆகியோர் பேரவை செயலாளரை தலைமை செயலகத்தில் இன்று காலை சந்தித்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற நினைவூட்டல் கடிதத்தை அளித்தனர்.

பேரவை செயலாளரிடம் அளித்த கடிதத்தில், சட்டமன்ற விதி இந்திய மக்களிடையே மத, இன ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி, இந்திய ஒற்றுமையையும், ஒருமைப் பாட்டையும் கேள்விக்குறியாக்கும், குடியுரிமை சட்டதிருத்தத்தை திரும்பப் பெறக் கோரி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.