கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், அனைத்து தரப்பு மக்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தினசரி வருமானத்தை நம்பியிருக்கும் கூலித் தொழிலாளர்கள் அதிகளவில் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை கொரட்டூர் பேருந்து நிலையத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 200 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களையும், 500 ரூபாய் பணத்தையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் நாகராஜ் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோல் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில், பகுதிச் செயலாளர் ஜோசப் சாமுவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முடி திருத்தும் தொழிலாளர்கள் 160 பேருக்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களை ஸ்டாலின் வழங்கினார்.
இதையும் படிங்க:'ஏழைகளுக்கு உணவளிப்போம்' திட்டத்தை தொடங்கிய ஸ்டாலின்