ETV Bharat / city

'இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது' - ஜெ. அன்பழகன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் - DMK leader MK Stalin condolence

சென்னை: இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது போல அன்பழகனின் மறைவு அதிர்ச்சியளிப்பதாகத் திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Stalin
Stalin
author img

By

Published : Jun 10, 2020, 10:04 AM IST

கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் இன்று காலை காலமானார். சேப்பக்கம் - திருவல்லிக்கேணி திமுக சட்டப்பேரவை உறுப்பினரான ஜெ. அன்பழகனின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்ரில் இரங்கல் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் "இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது. மக்கள் பணியில் அர்ப்பணித்துக்கொண்டு, தியாக தீபமாகச் சுடர்விட்டொளிரும் சகோதரர் ஜெ. அன்பழகனை எப்படி மறப்பேன்? நானே தேம்பி அழும் நிலையில், அன்புவின் குடும்பத்தாருக்கும், உடன்பிறப்புகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்? இனி எப்போது பாசமுகம் காண்பேன்?" என இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

62 வயதான அன்பழகன் கடந்த ஒரு வார காலமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். முன்னதாக இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின், டி.ஆர். பாலு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்றனர். அதன்பின்னரே அன்பழகனின் மறைவு அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காலமானார்: பிறந்தநாளில் உயிர் பிரிந்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.