ETV Bharat / city

ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் தேர்தல் பரப்புரை: அடையாளம் இழக்கும் திமுக உள்ளூர் முகங்கள்

தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் எனச் சூடு பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் தேர்தல் பரப்புரை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினை மட்டுமே முன்னிலைப்படுத்தி நடந்துவருவதும், மற்ற திமுக தலைவர்களுக்கான வாய்ப்பு கடந்த காலத்தைவிட குறைந்துவிட்டது இந்தத் தேர்தலில் தெளிவாகத் தெரிகிறது.

dmk election campaign highlights m.k. stalin
ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் திமுக தேர்தல் பரப்புரை
author img

By

Published : Mar 20, 2021, 2:43 PM IST

Updated : Mar 20, 2021, 7:48 PM IST

உள்ளூர் செயல் வீரர்கள்

திராவிட கட்சியான திமுகவுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் செல்வாக்குமிக்கத் தலைவர்கள் இருப்பது என்பது மிகப்பெரிய பலம். கட்சிக்கு அவர்கள் பெரிய அடையாளமாக மட்டுமில்லாமல் தூண்களாகவும் இருந்தனர்.

தலைமையைத் தவிர்த்து, இவர்களே கட்சிக்கான பிரபலமான முகமாகவும் திகழ்ந்துவருகின்றனர். இவர்களால் அடையாளப்படுத்தப்படும் உள்ளூர் செயல் வீரர்களே நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்களாகவும் களம்கண்டனர்.

பிற திராவிட கட்சிகளைவிட, இந்த நடைமுறை திமுகவில் அழுத்தமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது, இந்த மாவட்டத் தலைவர்களின் முக்கியத்துவம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருவது கண்கூடாகத் தெரிகிறது.

கட்சியின் தேர்தல் வியூகம், பரப்புரை ஆகியவற்றிலும் இவர்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்காமல் குறைந்துவருவதாகப் பேசப்படுகிறது.

ஸ்டாலினுக்கே முன்னிலை

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் எனச் சூடு பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் தேர்தல் பரப்புரை திமுக தலைவர் ஸ்டாலினை மட்டுமே முன்னிலைப்படுத்தி நடந்துவருகிறது. மற்ற திமுக தலைவர்களுக்கான வாய்ப்பு கடந்த காலத்தைவிட தற்போது குறைந்துள்ளது.

ஐபேக் வருகைக்குப்பிறகு, இது மிக தெளிவாகத் தெரிகிறது. இந்த நிலைமை, கட்சி அமைப்பில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

கருணாநிதி இருந்தபோது இருந்த ஜனநாயக கருத்து பரிமாற்றங்கள் இப்போது இல்லை

நட்சத்திரப் பேச்சாளர்கள்

தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிகளின் வளர்ச்சியில் உள்ளூர் தலைவர்கள், பேச்சாளர்கள் பங்கு அளப்பரியது. தங்களது கட்சியின் கொள்கைகளையும் பாமர மக்களிடம் பரப்பவதற்கும், அவர்களைக் கவருவதற்கும் பேச்சாளர்களையே பெரும்படையாகக் கொண்டிருந்த திராவிட கட்சிகள்.

அண்ணா ஆட்சி காலம் தொட்டே எம்ஜிஆரை திமுக தனது தேர்தல் பரப்புரைக்கு உபயோகப்படுத்தியது. மக்களுக்கு மிக அறிமுகமான முகமாக இருப்பதோடு, நட்சத்திர கவர்ச்சியின் மூலம் மக்களின் வாக்குகளைக் கவர முடியும் எனப் பலமாக நம்பினர். அது அக்கட்சிக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது.

திமுகவிலிருந்து பிரிந்து அண்ணா திமுக பிரபலமாக, எம்ஜிஆர் என்ற பிரபல முகம் மூலவராகத் தேர்தல் பரப்புரைக்குப் பயன்பட்டது.

அதேபோல் கருணாநிதி, திண்டுக்கல் லியோனி, புதுக்கோட்டை விஜயா, திருச்சி சிவா, வெற்றி கொண்டான் எனப் பெரும் பரப்புரை பீரங்கிகள் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் கடந்த காலங்களைவிட சிறந்த பேச்சாளர்களைப் பரப்புரைக்கு உபயோகிக்கப்பது அரிதாகிவிட்டதாகப் பார்க்கப்படுகிறது.

மோடிபோல் செயல்படும் ஸ்டாலின்

பேச்சாளர்கள் இல்லாத பரப்புரை

கட்சியின் இளைஞரணிச் செயலாளரும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதியை மட்டும் திமுக தனது தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்திக் கொள்கிறது, இது கட்சியின் அடுத்த வாரிசாக உருவாகச் சரியான தருணம் என நினைக்கிறது.

ஆனால் தேர்தலுக்குக் குறைவான நாள்களே உள்ள நிலையில் பேச்சாளர்களைப் பயன்படுத்துவதன் மூலம் அனைத்துப் பகுதிகளிலும் சென்றடைந்து அதை திமுகவுக்கு வாக்காக மாற்ற முடியும் என அரசியல் நோக்கர்கள் மட்டுமில்லாமல் கட்சியினரே கூறும் அளவுக்கு தற்போதைய சூழல் உள்ளது.

டிஜிட்டல் பரப்புரை

கடந்த காலங்களில் இணைய வசதி போதுமான அளவு இல்லை. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் டிஜிட்டல் முறையில் 24 மணி நேரமும் தேர்தல் பரப்புரை செய்யும் வசதி வந்துவிட்டது.

தொலைக்காட்சி விவாதங்களின் மூலம் செய்தித் தொடர்பாளர்கள் தங்கள் கட்சியின் கொள்கை மற்றும் நிலைப்பாடு குறித்து தெளிவாக எடுத்துக்கூறும் வசதி வந்துவிட்டது. இணையதளங்கள் மூலமும் பரப்புரைகளை நேரலையாக உடனுக்குடன் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வசதியும் உள்ளது. இதுபோன்ற காரணங்களால் கடந்த காலம் போன்று திமுக உள்ளுர் பேச்சாளர்களின் தேவை குறைந்துவிட்டது எனக் கூறப்படுகிறது.

திமுகவில் ஒரு நபர் வழிபாடு நடக்கிறது

பேச்சாளர்கள்- வேட்பாளர்களின் செலவு

திமுக பரப்புரையில் ஈடுபடும் பேச்சாளர்கள், திரையுலக நட்சத்திரங்களின் செலவு, வேட்பாளர் செலவு பட்டியலில் சேர்க்கப்படும். இதுபோன்ற காரணங்களாலும், கொள்கை பிடிப்புள்ள பேச்சாளர்கள் எண்ணிக்கை குறைவால் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் கட்சிகளின் செல்வாக்கைப் பொதுமக்கள் மத்தியில் குறைக்கின்றன.

ஆளுமைக்கான தேர்தல்

கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் இந்தத் தேர்தலில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது போட்டியிடும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளனர்.

இதனால் தொகுதி முழுவதும் தாங்களே முன்னின்று பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் வட்டாரத் தலைவர்கள், உள்ளூர் நிர்வாகிகளுக்கான வாய்ப்பு அரிதாகிவருகிறது.

இன்றைய சூழலில் தலைவர்களை மட்டுமே முன்னிலைப்படுத்துவது அரசியல் கட்சிகளின் கட்டமைப்பில் எழும் மாற்றத்தையே காட்டுகிறது என தெரிவிக்கின்றனர் அரசியல் செயற்பாட்டாளர்கள்.

இதையும் படிங்க: என் வெற்றி மீது நம்பிக்கை உள்ளது - நடிகை குஷ்பு

Last Updated : Mar 20, 2021, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.