நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக சார்பில் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பல்வேறு வாக்குறுதிகள் கொண்ட அந்த தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் இடம்பெற்றிருந்தது.
இதற்கிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவிற்கு வாக்களித்தால் மாதம் 1,500 கிடைக்கும் என தேர்தல் அறிக்கையை திரித்துப் பேசியிருந்தார்.
இந்நிலையில், ஜெயக்குமாரின் இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறையை மீறுகிற செயல் என்றும், இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹூவிடம் திமுக வழக்கறிஞர் அணியின் நிர்வாகி கிரிராஜன் புகார் கொடுத்துள்ளார்.