இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஊரடங்கை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டித்துள்ளதால், இதனால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம் குறித்து சிறப்புக் குழு அமைத்து ஆராய்ந்து சமூக, பொருளாதார, வாழ்வியல் தேவைகளுக்கான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்துதர வேண்டும்.
அன்றாடங் காய்ச்சிகள், கூலித் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், வார ஊதியம் பெறுபவர்கள், சிறு வியாபாரிகள், குறு நிறுவனங்களில் பணியாற்றுவோர், நெசவாளர்கள் ஆகிய பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அரசு அவர்களுக்கு அறிவித்த இழப்பீடுகள் நிச்சயம் போதுமானது அல்ல. எனவே, உடனடியாக ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை, அரசு வழங்கிட வேண்டும்.
கரோனா காலத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் போதாமை உள்ளதாக இன்னமும் தகவல் வருகிறது. அதனை அரசு சரி செய்ய வேண்டும். கரோனா காலத்திலும் களத்தில் நிற்கக் கூடிய இவர்களே பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பரிசோதனைகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். பரிசோதனைக் கருவிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றைத் தேவையான அளவுக்குத் தாராளமாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் வழங்க வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பொதுமக்களுக்கு ரூ.2000 வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!