சென்னை பட்டாபிராமில், ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த் , இதற்கு முன்பு ஆண்ட கட்சிக்கும், தற்போது ஆளும் கட்சிக்கும் சரிசமமான பலத்துடன் தேமுதிக இருக்கிறது.
ஒரு கட்சியை எப்படி வளர்க்க வேண்டும், அதனை ஆட்சிக்கு எப்படி கொண்டுவர வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். 234 தொகுதிகளிலும் 10 சதவீதம் வாக்குகள் பெற்று நிரூபித்து காட்டிய கட்சி தேமுதிக மட்டுமே.
மேலும் நமது முன்னோர்கள் "வாள்" வைத்து போரிட்டனர். தற்போது "வேல்" வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் நமக்கு வாளும் வேண்டாம் வேலும் வேண்டாம் நமக்கு மக்கள் சக்தி மட்டும் போதும். தேமுதிக பங்கேற்கும் கூட்டணியே வெற்றி கூட்டணி. தமிழகத்தில் ஊழல், லஞ்சம் இல்லாமல் மக்களுக்காக பாடுபடும் ஒரே கட்சி தேமுதிக மட்டுமே” என்றார்.
இதையும் படிங்க:'ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசு என்பதே அதிமுகவின் அடையாளம்' - மு.க. ஸ்டாலின்