சென்னை: ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளை முன்னிட்டு, அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். அந்த வகையில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீத கருணைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டாஸ்மாக் தொழிலாளர்கள் தங்களுக்கு 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்றும் டாஸ்மாக் கடை நேரத்தை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்களின் நலனில் அக்கறை கொள்ளுமா அரசு?