சென்னை: தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குநரான மாவட்ட ஆட்சியர் நாகராஜனின் மனைவி சபிதாராணிக்கு எதிராகச் சோதனை உத்தரவுபெற்ற வருமான வரித் துறையினர், 2016ஆம் ஆண்டு பல்லாவரம் வீட்டில் சோதனை நடத்தினர்.
சோதனையில் கணக்கில் வராத ஏழு லட்சத்து 28 ஆயிரத்து 300 ரூபாய் பணமும், சில நகைகளையும் கைப்பற்றினர். இது சம்பந்தமாக வருமான வரித் துறையினர் மதிப்பீடுசெய்த நிலையில், பறிமுதல்செய்த நகை, பணத்துக்கு மாவட்ட ஆட்சியர் நாகராஜன்தான் பயனாளி எனக்கூறி, பினாமி தடைச் சட்டத்தின்கீழ் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து நாகராஜன் தாக்கல்செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், பினாமி தடைச் சடத்தின்கீழ் வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீசுக்கு மூன்று வாரங்களில் விளக்கமளிக்க நாகராஜனுக்கு உத்தரவிட்டு, அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'தொலைந்துபோன சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள்: அரசு அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவு'