ஊரடங்கால் பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலாளர்களோடு மாற்றுத்திறனாளிகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருக்கும் அரசு சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகையை அரசு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக, அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அரசு இதுவரை எந்த நிவாரணமும் அறிவிக்காததால், மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன் இன்று கூடிய ஐம்பதுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தனி நபர் இடைவெளியை கடைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு தலையிட்டு, அனைத்து மாற்றுதிறனாளிகளுக்கும் நிவாரண நிதியாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என அப்போது அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்புப் பணிகளுக்கு கைதிகளை ஈடுபடுத்த உயர் நீதிமன்றம் மறுப்பு!