இது குறித்து பொது சுகாதார இயக்குநரகம் கூறியிருப்பதாவது, "ஜிகா வைரஸ் என்பது வளர்ந்துவரும் ஒரு வகையான நோய்க்கிருமியாகும். இது மனிதர்களைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய ஒரு வைரஸ் என்பதால் உலக சுகாதார நிறுவனம் இதை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை என்று அறிவித்துள்ளது.
ஜிகா என்பது ஒரு வகையான குடும்பத்தைச் சேர்ந்த ஆர்.என்.ஏ. வைரஸ் ஆகும். மேலும் ஜிகா வைரஸ் ஏ.டி.எஸ். கொசுக்களால் பரவுகிறது. இது டெங்கு, சிக்கன்குனியா, மஞ்சள் காய்ச்சலையும் பரப்புகிறது.
ஜிகா நோய் பரவக்கூடிய ஆசியாவில் உள்ள பல நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். சமீபத்தில் ஜிகா வைரஸ் கேரளாவில் பதிவாகியுள்ளது.
கேரளாவில் 18 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிகா நோய்த்தொற்றின் அறிகுறி தெரிந்தால் ஆர்டி-பிசிஆர் சோதனைசெய்து ஜிகா நோய் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.