ETV Bharat / city

10ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம்
அரசுத் தேர்வுகள் இயக்ககம்
author img

By

Published : Sep 8, 2021, 6:12 AM IST

சென்னை: பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உள்பட ) செப்.8ஆம் தேதி காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யும் முறை;

தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று ஹால் டிக்கெட் (HALL TICKET) என்ற வாசகத்தினை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்திலுள்ள ஹால் டிக்கெட் பதிவிறக்கம் (HALL TICKET DOWNLOAD) என்ற வாசகத்தினை கிளிக் செய்யவேண்டும்.

பின்னர், அதில் தோன்றும் பக்கத்தில், தங்களது விண்ணப்ப எண் (Application Number) அல்லது நிரந்தரப் பதிவெண் ( Permanent Register Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நுழைவுச்சீட்டு அவசியம்

செய்முறைத் தேர்வெழுத வேண்டிய தனித் தேர்வர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையத்திலேயே செப். 13, 14 ஆகிய தேதிகளில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வர்கள் உரிய தேர்வு மைய தலைமையாசிரியரை மேற்படி நாள்களில் அவசியம் அணுகுமாறு கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வுக்கான, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்ய மேற்குறிப்பிட்ட செயல்முறைகளை பின்பற்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். உரிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டின்றி எந்தவொரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீட் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரிய 16 வயது மாணவி மனு தள்ளுபடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.