ETV Bharat / city

அரசு கருவூலத்திற்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் காவலருக்கு சிறப்பு விருது - டிஜிபி அறிவிப்பு - மோட்டார் வாகனம்

காவல் துறையால் பறிமுதல்செய்யப்பட்ட, உரிமையாளர்களால் மீட்கப்படாமல் கிடக்கும் மோட்டார் வாகனங்களை அகற்றி அதன்மூலம் அரசு கருவூலத்திற்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் காவல் துறை அலுவலருக்கு ஜனவரி 15ஆம் தேதி சிறப்பு விருது வழங்கப்படும் என டிஜிபி (காவல் துறைத் தலைவர்) சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.

டிஜிபி சைலேந்திர பாபு
டிஜிபி சைலேந்திர பாபு
author img

By

Published : Nov 14, 2021, 8:24 AM IST

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறையால் பறிமுதல்செய்யப்பட்ட, உரிமையாளர்களால் மீட்கப்படாமல் கிடக்கும் மோட்டார் வாகனங்களை அகற்றி அதன் மூலம் அரசு கருவூலத்திற்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் காவல் துறை அலுவலருக்கு ஜனவரி 15ஆம் தேதி சிறப்பு விருது வழங்கப்படும் எனத் தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதற்காகப் பறிமுதல்செய்யப்பட்ட வாகனங்கள், விபத்தில் சிக்கி பறிமுதல்செய்யப்பட்ட வாகனங்கள், சாலை விதிகளை மீறியதற்காக காவல் துறையால் பறிமுதல்செய்யப்பட்டு உரிமையாளர்களால் மீட்கப்படாமல் இருக்கும் வாகனங்கள் என இருசக்கர வாகனங்கள் முதல் நான்கு சக்கர வாகனங்கள், லாரி எனப் பல வகையான வாகனங்கள் அனைத்து மாவட்ட காவல் நிலையங்களிலும் குவிந்துவருகின்றன.

காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்
காவல் துறையால் பறிமுதல்செய்யப்பட்ட வாகனங்கள்

பொது ஏலம்

மேலும், ஏற்கனவே காவல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் இதுபோன்ற வாகனங்களைப் பொது ஏலத்தில் விட்டு அப்புறப்படுத்துமாறும், அதன்மூலம் கிடைக்கும் வருவாயை அரசு கருவூலத்தில் சேர்க்குமாறும் அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

அரசு கஜானாவிற்கு அதிக வருவாய்
அரசு கருவூலத்திற்கு அதிக வருவாய்
அரசுக்கு வருவாயை அதிகரிக்கும்

இந்நிலையில் காவல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் மோட்டார் வாகனங்களை அகற்றி அதன்மூலம் அரசுக்கு வருவாயை அதிகரிக்கும் காவல் துறை அலுவலருக்கு வரும் ஜனவரி 15ஆம் தேதி சிறப்பு விருது வழங்கப்படும் என சைலேந்திர பாபு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

காவல்துறையினருக்கு சிறப்பு விருது
காவல் துறையினருக்குச் சிறப்பு விருது

சிறப்பு விருது வழங்கப்படும்

இது தொடர்பாகத் தமிழ்நாடு காவல் துறைத் தலைமையகம் வெளியிட்டுள்ள குறிப்பில் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி தேங்கிக் கிடக்கும் மோட்டார் வாகனங்களை அதிக அளவில் அகற்றிய காவல் துறை அலுவலருக்கு, அதேபோல அதிக வருவாயை ஈட்டி அரசு கருவூலத்தில் சேர்த்த காவல் துறை அலுவலருக்குவரும் ஜனவரி 15ஆம் தேதி சிறப்பு விருது வழங்கப்படும் என்றும்,

காவல்துறையினருக்கு சிறப்பு விருது
காவல் துறையினருக்குச் சிறப்பு விருது

அந்தந்த மாவட்ட காவல் நிலைய அலுவலர்கள் தங்கள் காவல் நிலையங்களில் அப்புறப்படுத்தப்பட்ட வாகனங்கள், கிடைக்கப்பெற்ற வருவாய் குறித்த விவரங்களைக் குறிப்பிட்டு வரும் ஜனவரி 12ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை காவல் துறைத் தலைமையகத்துக்கு அனுப்புமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதற்காக சைலேந்திர பாபு உத்தரவின்பேரில் காவல் துறை கூடுதல் தலைவர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவானது விருதுக்குத் தகுதியானவர்களைத் தேர்வுசெய்து அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிபி சைலேந்திர பாபு
டிஜிபி சைலேந்திர பாபு

இதையும் படிங்க: உழவருக்கு உடனடி நிவாரணம் - ஸ்டாலின் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.