ETV Bharat / city

மாநகரப் பேருந்து சேவை அதிகரிக்கப்பட்டாலும் மக்களின் பயன்பாடு குறைவு! - சென்னை போக்குவரத்து செய்திகள்

கரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, படிப்படியாகப் பேருந்துகள் இயக்கம் அதிகரிக்கப்பட்டாலும், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாதது, தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்துவருவது போன்ற காரணங்களால் சென்னை மாநகரப் பேருந்துகளில் குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் பயணித்துவருவதாக போக்குவரத்து அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை மாநகரப் போக்குவரத்து
சென்னை மாநகரப் போக்குவரத்து
author img

By

Published : Dec 24, 2020, 6:15 AM IST

Updated : Dec 26, 2020, 4:55 PM IST

சென்னை: கரோனா பெருந்தொற்று பாதிப்புகளுக்குப்பின் அறிவிக்கப்பட்ட ஊரடங்குத் தளர்வால் மீண்டும் பொதுப் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்பட்டன. அது முதல் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் இயக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. ஊரடங்கு முடிந்து மீண்டும் பேருந்து சேவைகள் இயக்கப்பட்டபோது 1,700 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 2,500 பேருந்துகள் இயக்கப்பட்டுவருவதாகவும், அவற்றில் தோராயமாக 15 லட்சம் மக்கள் பயணம் செய்துவருவதாகவும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்திகளிடம் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அலுவலர் ஒருவர் கூறுகையில், "சென்னை மாநகரப் பேருந்துகளில் முன்பைவிட குறைவான மக்களே பயணம் செய்துவந்தனர். அண்மையில் பேருந்துகளில் 100 விழுக்காடு இருக்கைகளில் மக்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டதிலிருந்து பேருந்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

கரோனா பெருந்தொற்றுப் பரவலுக்கு முன்பு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், நாள்தோறும் சுமார் 32 முதல் 36 லட்சம் மக்கள் பயணித்துவந்தனர். தற்போது பயணிகளின் எண்ணிக்கை 15 லட்சம் என்ற அளவிலேயே உள்ளது. இத்தனை பயணிகளுக்கு, 1500 முதல் 1600 பேருந்துகளை இயக்கினாலே போதுமானது என்றாலும், கரோனா தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.

கரோனா ஊரடங்கு காலத்துக்கு முன்பு சுமார் 1.50 லட்சம் பயண அட்டைகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது வெறும் 60 ஆயிரம் பயண அட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அடுத்த ஜனவரி மாதத்தில் 250 பேருந்துகளை கூடுதலாக இயக்க முடிவுசெய்துள்ளோம். ஒட்டுமொத்தமாக கரோனா ஊரடங்குக்கு முன்பு இருந்த மக்கள் பயன்பாட்டைவிட, தற்போது 15 விழுக்காடு பயன்பாடு குறைவாகவே உள்ளது. போக்குவரத்துக் கழகம் நட்டத்தில்தான் செல்கிறது; அரசின் உதவியுடன்தான் இயக்கப்படுகிறது" என்றார்.

தொடர்ந்து அவர், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மணிமகுடமான குளிர்சாதனப் பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவர், "சென்னையில் மொத்தம் 49 குளிர்சாதனப் பேருந்துகள் உள்ளன. இவற்றை, மத்திய அரசின் கரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளுக்குள்படுத்தி மீண்டும் இயக்க தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

அதற்கு அரசு அனுமதி வழங்கியதும், மீண்டும் முக்கிய வழித்தடங்களில் குளர்சாதன பேருந்துகள் இயக்கப்படும். பாதுகாப்பு நடவடிக்கைக்காக பேருந்துகளில், 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கடைப்பிடிக்கப்படும். தேவை ஏற்பட்டால் பேருந்துகளில் மேற்கூரையில் உள்ள 'சன் ரூப்' திறந்து பேருந்து இயக்கப்படும்" எனக் கூறினார்.

இது தொடர்பாக மற்றொரு மூத்த அலுவலர் பேசுகையில், "தற்போது பீக் ஹவர்ஸ் என்றழைக்கப்படும் பிரதான நேரங்களில் மட்டுமே பயணிகள் கூட்டம் உள்ளது. மற்ற நேரங்களில் குறைவான பயணிகளுடனேயே பேருந்துகள் இயக்கப்படுகிறன. இரவு நேரங்களில் ஊரடங்கு அமலில் இருப்பது, வயதானவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாதது போன்ற காரணங்களால் பேருந்துகளில் கூட்டம் குறைவாக உள்ளது. சாதாரண நாள்களில் சென்னை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 4.5 லட்சம் பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணிப்பர். அதேபோல் சுமார் 1.5 லட்சம் கல்லூரி மாணவர்கள் பயணிப்பர். ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்களும் மாநகரப் பேருந்துகளில் அன்றாடம் பயணப்படுவர்.

தற்போது அவர்களில் பெரும்பாலானோர் வீட்டிலிருந்து பணியாற்றிவருகின்றனர். நடுத்தர மக்கள் வேறு மார்க்கங்கள் வழியாகப் பயணம் செய்கின்றனர். முன்புபோல் இல்லாமல் கரோனா தொடர்பாக மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு அதிகரித்துவருகிறது. இதனால் பேருந்தில் பயணிப்பதைத் தவிர்த்துவிட்டு இருசக்கர வாகனங்களை அதிகளவில் பயன்படுத்திவருகின்றனர். நோய் குறித்த அச்சம் நீங்கும்வரை பேருந்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: நில் கவனி செல்லாதே...செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒளிராத போக்குவரத்து சிக்னல்கள்!

Last Updated : Dec 26, 2020, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.