ETV Bharat / city

கருப்பட்டியை பயன்படுத்தி ஆவினில் சுவையான இனிப்பு - milk sweet

ஆவினில் கருப்பட்டியை பயன்படுத்தி சுவையான இனிப்பு வகைகளை தயாரிக்கும் வழிவகைகளை ஆராய்ந்து, விரைவில் விற்பனைக்கு அறிமுகபடுத்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கருப்பட்டியை பயன்படுத்தி  ஆவினில் சுவையான இனிப்பு

author img

By

Published : Jul 26, 2022, 2:21 PM IST

சென்னை: பால்வளத்துறை அமைச்சர் நாசர் தலைமையில் தீபாவளி-2022 பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சுவைமிகுந்த சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கடந்த ஆண்டு தீபாவளியை போலவே, இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கும் சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது.

1) காஜூ கட்லீ (250 கி)
2) நட்டி அல்வா (250 கி)
3) மோத்தி பாக் (250 கி)
4) காஜு பிஸ்தா ரோல் (250 கி)
5) நெய் பாதுஷா (250 கி)
6) கார வகைகள்
7) இனிப்பு தொகுப்பு (500 கி) (Combo Box)

தயாரிப்பு மற்றும் விற்பனை இலக்கு தொடர்பாக விரிவான ஆய்வினை பால்வளத்துறை அமைச்சர் மேற்கொண்டார். இதில், தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை மிகுந்த சுவைமிக்கதாகவும் மற்றும் தரமாக தயாரிக்கவும், கருப்பட்டியை பயன்படுத்தி சுவையான இனிப்பு வகைகளை தயாரிக்கும் வழிவகைகளை ஆராயவும் ஆலோசனை வழங்கினார்.

கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு இனிப்புகள், நெய் மற்றும் பிற பொருட்கள் ரூ.82 கோடி அளவில் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.200 கோடி வரை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்து விற்பனை உத்திகளையும் கையாளவும், அரசு துறை அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், கூட்டுறவு நிறுவனங்கள், போக்குவரத்து துறை மற்றும் பிற நிறுவனங்களுக்கு தேவையான இனிப்பு வகைகளை வழங்க முன்கூட்டி திட்டமிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், சாலை சந்திப்புகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களை தேர்வு செய்து விற்பனை மேற்கொள்ள வேண்டும். தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை ஏற்றுமதி செய்வதற்கான முகாந்திரங்களை ஆராயவும், தக்க அனுமதி மற்றும் தேவையான சான்றிதழ்களை பெறுவது குறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் ஆவின் சில்லரை விற்பனையாளர்களிடமிருந்து வாங்கி பயன்பெற கீழ்க்கண்ட தொலைபேசியை தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெற்கு மண்டலம் - 9444728505
வடக்கு மண்டலம் - 9566860286
மத்திய மண்டலம் - 9790773955

மேலும் கூடுதல் தகவல்களுக்கு 18004253300 என்ற அலைபேசி என்னை 24X7 தொடர்பு கொள்ளலாம். தங்களுக்கோ தங்களின் ஊழியர்களுக்கோ ஆயுத பூஜை மற்றும் தீபாவளிக்கு தேவையான தரமான முறையில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை மொத்தமாக பெற்றுக் கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆவின் பால் பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.