தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நடைபெற்ற தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக சமீப காலமாகவே புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்தப் புகார்கள் தொடர்பாக தற்போது சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி வெளியான திமுக சார்பு நாளிதழில் டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்பு இருப்பது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் விரைவில் உண்மை வெளிவரும் என தயாநிதிமாறன் பேட்டி அளித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் தமிழ்நாடு அரசு சென்னையில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தயாநிதி மாறனுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த மனுவில், "தயாநிதி மாறன் கருத்து தவறானது. ஆதாரம் இல்லாமல் உண்மைக்கு புறம்பாக உள் நோக்கத்துடன் பேசியுள்ளார். எனவே தயாநிதிமாறன் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: