சென்னை: சென்னை வேளச்சேரியில் 2015ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதேபோல, அரசு பணியாளர் தேர்வாணையம் முறைகேடு தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புப்படுத்தி பேசிய விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீதும் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஆர்.எஸ். பாரதி, தயாநிதி மாறன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதி நிர்மல் குமார் முன் நடைபெற்றது.
வழக்குகள் ரத்து
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து முதலமைச்சர் அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதி நிர்மல் குமார் ஆர்.எஸ். பாரதி, தயாநிதி மாறன் ஆகியோர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அறங்காவலர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது தொடர்பான வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு