இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் குறைந்துவருகிறது. இன்று(நவ.15) மேலும் 1,819 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,520 பேர் குணமடைந்தனர். 12 பேர் உயிரிழந்தனர். அவர்களில் தனியார் மருத்துவமனையில் 7 பேர், அரசு மருத்துவமனையில் 5 பேர் ஆவர்.
மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, 7 லட்சத்து 30 ஆயிரத்து 272 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 478 ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 441ஆக உள்ளது.
தஞ்சாவூரில் மேலும் ஒரு தனியார் பரிசோதனை மையத்தில் ஆர்டிபிசிஆர் சோதனைக்கு வழங்கப்பட்டுள்ளதால் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 209ஆக உயர்ந்துள்ளது. அதன்படி புதிதாக 64 ஆயிரத்து 213 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 7 லட்சத்து 91 ஆயிரத்து 896 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:
- சென்னை - 2,08,668
- கோயம்புத்தூர் - 46,408
- செங்கல்பட்டு - 45,893
- திருவள்ளூர் - 39,619
- சேலம் - 28,794
- காஞ்சிபுரம் - 26,750
- கடலூர் - 23,814
- மதுரை - 19,318
- வேலூர் - 18,724
- திருவண்ணாமலை - 18,256
- தேனி - 16,410
- தஞ்சாவூர் - 16,439
- விருதுநகர் - 15,682
- தூத்துக்குடி - 15,467
- கன்னியாகுமரி - 15,412
- ராணிப்பேட்டை - 15,336
- திருநெல்வேலி - 14,603
- விழுப்புரம் - 14,301
- திருப்பூர் - 14,298
- திருச்சி - 13,047
- ஈரோடு - 11,599
- புதுக்கோட்டை - 10,939
- கள்ளக்குறிச்சி - 10,516
- திண்டுக்கல் - 10,055
- திருவாரூர் - 10,141
- நாமக்கல் - 9,902
- தென்காசி - 7,937
- நாகப்பட்டினம் - 7,228
- திருப்பத்தூர் - 7,041
- நீலகிரி - 7,112
- கிருஷ்ணகிரி - 7,087
- ராமநாதபுரம் - 6,124
- சிவகங்கை - 6,149
- தர்மபுரி - 5,875
- அரியலூர்- 4,502
- கரூர் - 4,469
- பெரம்பலூர் - 2,228
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 925
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 982
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: ஹரியானாவில் கரோனா வைரஸ் இரண்டாம் அலை?