பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 633 இளநிலை உதவியாளர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடைபெற உள்ளது.
இந்தக் கலந்தாய்வு தேர்வாணையப் பட்டியலில் ஒன்று முதல் 330 வரை உள்ளவர்களுக்கு, செப்டம்பர் 17ஆம் தேதியும், 331 முதல் 633 வரை உள்ளவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதியும் இணையதளம் மூலம் நடைபெறும்.
சம்பந்தப்பட்ட தேர்வர்கள், அவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் நாளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சென்று கலந்தாய்வில் பங்கேற்று பணி நியமன ஆணை பெறலாம்" என அதில் கூறியுள்ளார்.
இளநிலை உதவியாளர் நியமன கலந்தாய்வு தேதி அறிவிப்பு - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்
சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் 633 இளநிலை உதவியாளர்கள் நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.