ETV Bharat / city

கல்வி உதவித் தொகைக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு தேதி மீண்டும் மாற்றம்

author img

By

Published : Jan 19, 2022, 7:58 PM IST

வேகமெடுக்கும் கரோனா, ஒமைக்ரான் தொற்று பரவல்களினால், கல்வி உதவித் தொகைக்கான தேர்வு தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுத் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

கல்வி
கல்வி

சென்னை: மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெறும் தேதி கரோனா தொற்றின் காரணமாக மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தேசிய திறனாய்வுத் தேர்வு 29.1.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

தேதி மாற்றம்

இந்த நிலையில், கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 5.2.2022 ( சனிக்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

மேலும், தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை 19.1.2022 அன்று பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில், தேர்வு தேதி மாற்றத்தின் காரணமாக 25.1.2022 மதியம் முதல் சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர், தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள யூசர் ஐடி, பாஸ்வேர்டை பயன்படுத்தி இத்தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

முகக் கவசம் கட்டாயம்

தேர்வர்கள் தேசிய திறனாய்வுத் தேர்விற்கான நுழைவுச்சீட்டுகளைப் பெற தங்கள் பள்ளிக்கு வரும்பொழுது கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும். தேர்வர்கள் போதிய தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'அரசு மருத்துவர்களின் கோரிக்கை மீது கவனம் தேவை முதலமைச்சரே!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.