சென்னை கொத்தவால்சாவடி டேவிட்சன் சாலையில் மிகவும் பழைமைவாய்ந்த திரையரங்கம் மினர்வா. தற்போது பாட்ஷா எனப் பெயர் மாற்றம்செய்யப்பட்டு இயங்கிவருகிறது. கரோனா காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்கம் தற்போது திறக்கப்பட்டு இயங்கிவருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையினால் இந்தத் திரையரங்கத்தின் பக்கவாட்டு சுவர் திடீரென்று நேற்று (டிச. 07) இரவு இடிந்து விழுந்துள்ளது. இடிந்த சுவரானது அருகில் நிற்கவைத்திருந்த காவலர்களின் இருசக்கர வாகனத்தின் மீது விழுந்தது. இதில் மூன்று இருசக்கர வாகனங்கள் முழுவதுமாகச் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக திரையரங்கம் அருகே கொத்தவால்சாவடி காவல் நிலையம் உள்ளதால் வாகனங்களை நிறுத்திவைப்பது வழக்கம் எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக கொத்தவால்சாவடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: குமரியில் ஒரு சபரிமலை: குபேர ஐயப்ப சாமி கோயிலுக்குப் படையெடுக்கும் பக்தர்கள்!