சென்னை: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை நாள்தோறும் கரோனா தொற்று நிலவரம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுவருகிறது. அந்த வகையில், இன்று வெளியிட்ட அறிவிப்பில், "மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் இரண்டாயிரத்து 205 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரேநாளில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், இரண்டாயிரத்து 802 நபர்கள் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தலைநகர் சென்னையில் 137 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கோயம்புத்தூரில் 241 பேருக்குப் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்