ETV Bharat / city

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண் குறைவு? - தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள அரசு, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நடப்பாண்டில் கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான  கட் ஆப் மதிப்பெண் குறைகிறது

author img

By

Published : Oct 17, 2022, 10:55 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) படிப்புகளுக்கு சேர்வதற்கு ஆன்லைன் மூலம் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை பெறப்பட்டது. 22ஆயிரத்து 54 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லுரிகளில் உள்ள மொத்த இடங்கள் 6ஆயிரத்து 67 ஆகும்.

இதில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லுரிகளில் உள்ள மொத்த இடங்கள் ஆயிரத்து 380 ஆகும். சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு 19ஆம் தேதி நேரடி கலந்தாய்வு தொடங்குகிறது. அதனை தொடர்ந்து பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.

அந்த வகையில் கடந்தாண்டை காட்டிலும் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான கட் மதிப் பெண்கள் குறைய உள்ளது. பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கடந்த ஆண்டு இறுதிச்சுற்று கட் ஆப் மதிப்பெண் 539 என முடிவுற்ற நிலையில் இந்த ஆண்டு 12 மதிப்பெண்களும், 2ஆம் சுற்றில் 18 மதிப்பெண்கள் வரையும் குறையும் என தெரிகிறது.

மேலும் பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவில் கடந்த ஆண்டு 519 என இருந்தது இந்தாண்டு 503 ஆக குறையும். இதே போன்று மற்ற பிரிவினருக்கும் மதிப்பெண்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தாவரவியல், விலங்கியல் பாடங்களில் நீட் தேர்வில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டதால் மதிப்பெண்கள் குறைந்து நடப்பாண்டு கட் ஆப் மதிப்பெண்கள் குறைந்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க: ஆசிரியர் பயிற்சி தேர்வில் 10 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.