ETV Bharat / city

மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு - தனிப்படையினர் செல்போன் சிக்னலை கண்காணித்து தப்பிய குற்றவாளிகள்!

author img

By

Published : Nov 20, 2020, 9:07 AM IST

சென்னை: யானைக்கவுனியில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆக்ராவில் கைதான மூவரும், தங்களை பிடிக்க வரும் தனிப்படை காவலர்களின் செல்போன் சிக்னல் நகர்வை வைத்து தப்பியோடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் தலில்சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், மகன் சீத்தல் ஆகிய மூவரும் கடந்த 11ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக யானைக்கவுனி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மனநலம் சற்று பாதிக்கப்பட்ட சீத்தலிடம் இருந்து பிரிந்து ஜெயமாலாவும், இரண்டு மகள்களும் புனேயில் வசித்து வருகின்றனர். தங்களது சகோதரி ஜெயமாலாவுக்கு ஜீவனாம்சமாக 4 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தர வேண்டும் என, ஜெயமாலாவின் சகோதரர்கள் கைலாஷ், வழக்குரைஞர் விலாஷ் ஆகியோர் பல முறை சீத்தலின் தந்தையிடம் கேட்டுள்ளனர்.

பல முறை கேட்டும் தரமறுத்ததால் ஆத்திரமடைந்த ஜெயமாலாவின் சகோதரர்கள் கைலாஷ், வழக்குரைஞர் விலாஷ் தலைமையில் வந்த கும்பல் மூவரையும் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய தெரியவந்தது. மூவரை கொலை செய்துவிட்டு கார், இருசக்கர வாகனம் மூலமாக சென்னையை அடுத்த காட்டூரில் கைலாஷ் வசிக்கும் பகுதிக்குத் தப்பியோடியுள்ளனர். அங்கிருந்து இரு கார்களில் தலா மூவர் என தப்பி சென்றுள்ளனர்.

விசாரணையில் முதலில் உத்தரப்பிரதேச மாநில எண் கொண்ட காரில் தான் அனைவரும் தப்பி செல்கின்றனர் என சிசிடிவி மூலமாக கண்டறிந்த காவல்துறையினர், மற்றொரு காரில் தனியாக 3 பேர் தப்பி செல்வதைக் கணிக்காமல் இருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து தெலுங்கானா, கர்நாடக மாநில காவல்துறையினர் உதவியுடன் சுங்கச்சாவடிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை பார்த்தபோது, குற்றவாளிகள் புனே செல்வது தமிழக காவல்துறையினருக்குத் தெரியவந்துள்ளது.

சிக்காமல் டிமிக்கி கொடுத்த மூவர்

அதைத்தொடர்ந்து விமானம் மூலம் புனேவிற்குச் சென்ற மூன்று தனிப்படையினர் அங்கு காத்திருந்து குற்றவாளிகளை கார் நகர்வைக் கண்காணித்துவந்தனர். அப்போது சோலாப்பூரில் கார் வருவதைக் கண்டறிந்து துரத்தி சென்ற தனிப்படையினர் குற்றவாளிகளை மடக்கிப் பிடித்தனர்.

சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் பிடித்துவிட்டதாக நினைத்து காரில் பார்க்கும் போது, அதில் கைலாஷ், ரபீந்தர நாத்கர், விஜய் உத்தம் ஆகியோர் மட்டுமே இருந்தது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மூவரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

கைது செய்தவர்களை பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சம்பவத்தில் தொடர்புடைய ஜெயமாலா, விலாஷ், ராஜிவ் சிண்டே ஆகியோர் எங்கே தப்பிச் சென்றனர் என்பதை தேடிவந்தனர். முதலில் காவல்துறையினரிடம் மூன்று பேர் கைதானதில் இருந்து ஜெயமாலா, விலாஷ், ராஜிவ் சிண்டே சிக்கக்கூடாது என உஷாராக இருந்துள்ளனர்.

தொடர்ந்து சிசிடிவி ஆய்வு செய்து மற்றொரு காரில் தப்பியோடிய மூவரை பின்தொடர்ந்து தனிப்படை காவல்துறையினருக்கு,ஏமாற்றமே மிஞ்சியது. மஹாராஷ்டிராவில் உள்ள நண்பர் உதவியோடு ஜெயமாலா, விலாஷ், ராஜிவ் சிண்டே ஆகியோர் தனிப்படையினர் பிடியில் சிக்காமல் தப்பிவந்துள்ளனர்.

இந்த நிலையில், மூவரின் செல்போன் எண்களை வைத்து, மூவரின் உறவினர், நண்பர்கள் என 10 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். குறிப்பாக, அவர்களது செல்போனை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் கண்காணித்து வந்தனர். இருப்பினும் செல்போன் சிக்னல் வைத்து தேடி செல்லும் இடத்திலிருந்து தொடர்ந்து ஜெயமாலா, விலாஷ், ராஜிவ் சிண்டே ஆகியோர் தப்பிச் சென்றனர்.

இந்த நிலையில், விலாஷின் நண்பரின் எண்ணுக்கு புதிய எண்களில் இருந்து தொடர் அழைப்புகள் வந்தது தனிப்படை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்த எண்களை வைத்து தேடி செல்லும் போது, மூவரும் மத்திய பிரதேசத்தில் இருப்பது தெரிய வந்தது.

தனிப்படை செல்போன் சிக்னலை டிராக் செய்த குற்றவாளி

நேற்று முன் தினம்(நவ.18) அங்கிருந்த மூவரையும் பிடிக்க முயன்றபோதும் தப்பிச் சென்றுள்ளனர். புதியதாக செல்போன் எண்கள் வாங்கியது யாரிடம் என விசாரணை செய்த போது, விலாஷின் நண்பர் மூலம் பல சிம்கார்டுகள், சாதாரண செல்போன்கள் வாங்கியதைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

மேலும் கைலாஷின் நண்பரை கைது செய்யாமல் தொடர்ந்து, புதிய செல்போன் எண்களை 'ஆக்டிவேட்' செய்வதைத் தனிப்படையினர் கண்காணித்தனர். அந்த எண்ணிண் செல்போன் சிக்னல் மூலம் தனிப்படையினர் குஜராத்தில் பதுங்கியிருந்த ஜெயமாலா, விலாஷ், ராஜிவ் சிண்டேவை கைது செய்ய முயன்றபோது, அங்கிருந்தும் மூவரும் தப்பிச் சென்றதில் காவல்துறையினர் விரக்தியடைந்தனர்.

இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், தங்கள் நகர்வையும், பிடிக்க வருவதையும் முன்கூட்டியே அறிந்து குற்றவாளிகள் மூவரும் தப்பிச் செல்வதைக் கண்டறிந்தனர். இந்த நிலையில், மீண்டும் புதிய எண்ணில் இருந்து கைலாஷ் நண்பருக்கு கால் செய்துள்ளார்.

அப்போது எங்கிருந்து பேசுகிறான் என, சைபர் க்ரைம் காவல்துறையினர் உதவியுடன் கண்டுபிடித்ததில் ஆக்ராவிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் இருப்பது தெரியவந்தது. உடனே உஷாரான தனிப்படை, ஆக்ராவிலுள்ள காவல்துறையினருக்கு வாட்ஸ்-அப் கால் மூலம் பேசி, ஜெயமாலா, விலாஷ், ராஜிவ் சிண்டே ஆகியோரின் புகைப்படங்களை அனுப்பி உடனே அவர்களை கைது செய்யுமாறு அறிவுறுத்தினர்.

சென்னை தனிப்படையினர் குஜாராத்தில் தான் தங்கியிருப்பதாக நம்பி ஆக்ரா விடுதியில் தங்கிய மூவரையும் ஆக்ரா காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது, விலாஷ் வழக்கறிஞர் என்பதால் காவல்துறையினர் எவ்வாறு குற்றவாளிகளை தேடுவர் என்பதை அறிந்து தப்பித்துச் சென்றது தெரியவந்தது.

குறிப்பாக, தங்களை தேடும் தனிப்படையினர் எண்ணை கண்டுபிடித்து, அவர்கள் எங்குச் செல்கிறார்கள் என நண்பர்கள் மூலம் சிக்னல்களை கண்காணித்து வந்துள்ளார் விலாஷ். தனிப்படையினர் தேடிச்செல்லும் போதேல்லாம் பிடிக்க வருவதை அறிந்து, அங்கிருந்து மற்றொரு இடத்துக்கு மூவரும் தப்பியோடியதாகத் தெரிவித்துள்ளார்.

செல்போன் சிக்னலை வைத்து தேடும் போலீசாரையே, அதே செல்போன் சிக்னலை வைத்து தனிப்படையினர் நடமாட்டத்தை வழக்குரைஞர் விலாஷ், நண்பர் உதவியுடன் கண்காணித்து மூவரும் தப்பிச் சென்றதை காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
10 சிம்கார்டுகள் பறிமுதல்
கைதானவர்களிடம் இருந்து பத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள், ஐந்து செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக, தனிப்படையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பிடிபட்ட மூவரையும் ஆக்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி," டிரான்சிட் வாரண்ட்" பெற்று நாளை(நவ.21) சென்னை அழைத்து வருவோம் என, தனிப்படையினர் தெரிவித்தனர். இதற்கிடையில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் பெண் காவலர் இடம்பெற்றுள்ள தனிப்படை விமானத்தில் டெல்லி சென்று, அங்கிருந்து ஆக்ரா சென்றுள்ளது.

ஜெயமாலா பெண் என்பதால், அவரை அழைத்து வர தனிப்படையில் பெண் காவலரும் இடம்பெற்றுள்ளார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

குற்றவாளிகளை பிடிக்க பயன்படுத்தும் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழக்குரைஞர் விலாஷ், ஜெயமாலா, ராஜிவ் சிண்டே ஆகியோர் தொடர்ந்து தப்பித்தாலும், அவர்களை பிடித்த தனிப்படை காவலருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.