இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் வருங்கால நலன் கருதி 17.09.2021-அன்று, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் இணைந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் அனைவரின் நலனுக்காக இரண்டு நிறைவேற்றப்பட்டு ஒரு "ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு" (JOINT PRODUCERS COMMITTEE or JPC) அமைக்கப்பட்டது.
சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்படத் தீர்மானம்
இந்த JPC கமிட்டியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, 1) தற்போது தயாரிப்பில் உள்ள திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களைப் பயன்படுத்தி படப்பிடிப்புகளை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2) தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு நிலுவையில் உள்ள படங்களின் வெளியீட்டிற்கு உதவுவது என்று தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
3) விளம்பரச் செலவுகளை குறைப்பது குறித்தும், வி.பி.எஃப் (VPF) கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
4) Fefsi-யுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒருங்கிணைந்து தயாரிப்பாளர்களின் நலனுக்கான ஒப்பந்தங்கள் செய்யப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்