ETV Bharat / city

இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு சிபிஎம் இரங்கல்!

சென்னை: திரைப்பட இயக்குநர் மகேந்திரனின் மறைவிற்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மகேந்திரன்
author img

By

Published : Apr 2, 2019, 10:03 PM IST

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் இன்று சென்னையில் காலமானார். இது குறித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

“திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். நவீன தமிழ் சினிமாவின் துவக்கப் புள்ளிகளில் ஒருவரான இயக்குநர் மகேந்திரன், வசனங்களின் வழியே கதை சொல்லும் பாணியை மாற்றி காட்சிகளின் வழியே கதை சொல்லும் பாணியை உருவாக்கியவர்.

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்ளிட்ட அவருடைய திரைப்படங்கள் காலத்தால் அழியாத காவியங்களாகும். தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்திய இயக்குநர் மகேந்திரன் ஏராளமான இளைஞர்கள் திரைத்துறைக்கு வருவதற்கு ஆதர்ஷமாக அமைந்தவர். அவரது மறைவு தமிழ் திரையுலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

அவரை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்
கொள்கிறோம்.

நவீன தமிழ் சினிமாவின் துவக்கப் புள்ளிகளில் ஒருவரான இயக்குநர்
மகேந்திரன், வசனங்களின் வழியே கதை சொல்லும் பாணியை மாற்றி
காட்சிகளின் வழியே கதை சொல்லும் பாணியை உருவாக்கியவர். முள்ளும்
மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்ளிட்ட அவருடைய
திரைப்படங்கள் காலத்தால் அழியாத காவியங்களாகும். தமிழ்ச் சினிமாவை
உலகத் தரத்திற்கு உயர்த்தியவர் அவர்.

இயக்குநர் மகேந்திரன் ஏராளமான இளைஞர்கள் திரைத்துறைக்கு வருவதற்கு
ஆதர்ஷமாக அமைந்தவர். அவரது மறைவு தமிழ் திரையுலகத்திற்கு ஈடு
செய்ய முடியாத இழப்பாகும். அவரை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கும்
அவரது ரசிகர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.