ETV Bharat / city

சட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ (எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அறிவிப்பு - சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலை நடைபெற இருப்பதையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக மாநில செயற்குழு உறுப்பினர் பி.சண்முகம் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் மாநிலக்குழு உருவாக்கியுள்ளது.

CPM
CPM
author img

By

Published : Dec 19, 2020, 8:30 PM IST

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக மாநில செயற்குழு உறுப்பினர் பி.சண்முகம் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை மாநிலக்குழு அமைத்துள்ளது. அந்த குழுவில் வாசுகி, குணசேகரன், கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம், வெங்கடேசன் எம்.பி., சுகுமாறன், கண்ணன், சுகந்தி, தீபா, சாமுவேல்ராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சென்று தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு-குறு தொழில் முனைவோர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஏழை, எளிய மக்களின் பிரச்னைகள் தொடர்பாக நேரில் கலந்துரையாடி, மாநிலத்தின் வளர்ச்சி, தொழில், விவசாயம், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, தமிழ் மொழி வளர்ச்சி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதித்து தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்வர்.

தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய பிரச்னைகள் குறித்து தங்களது கோரிக்கைகள் cpimtn2009@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கும், சிபிஐ (எம்) தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்குமாறு அனைத்துப் பகுதி மக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

மருத்துவர், செவிலியர், லேப் டெக்னீசியன்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்திடுக:

தமிழ்நாடு கோவிட் -19 பாதிப்பை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னிசீயன்கள் மற்றும் இதர சுகாதார பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோரின் தேவை அதிகரித்த போது, மருத்துவர், செவிலியர், லேப் டெக்னீசியன்களை ஒப்பந்த அடிப்படையில் அரசு நியமித்தது. இந்த பணியாளர்களின் செயல்பாடு, தமிழ்நாட்டில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த உதவியது.

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள் ஆகியோருக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது. தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றியவர்களுக்கு வெகுமதி அளிப்பதாக வாக்குறுதி அளித்த தமிழ்நாடு அரசு, அவர்களுக்கு சம்பளம் வழங்காதது கண்டிக்கத்தக்கது. எனவே, மருத்துவர், செவிலியர், லேப் டெக்னீசியன் அனைவருக்கும் நிலுவை சம்பளம் வழங்குவது மட்டுமல்லாமல், பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

எச்.பி.எல். தடுப்பூசி மையத்தை பொதுத்துறையாக செயல்படுத்தி உற்பத்தியை தொடங்க வேண்டும்:

மத்திய அரசின் சார்பில் செங்கல்பட்டுக்கு அருகில் ரூ. 600 கோடி செலவில் எச்.பி.எல். தடுப்பூசி மையம் சர்வதேச தரத்துடன் உருவாக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த தடுப்பூசி மையத்தை மூடி தனியாருக்கு தாரை வார்க்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. இதை மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கரோனா உள்ளிட்ட அனைத்து வைரஸ்களையும் தடுப்பதற்கான தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான மையமாக இதை பயன்படுத்த வேண்டும்". இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.