இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி நதி நீர் உரிமையைப் பாதுகாக்க தமிழ்நாடு நீண்டகாலமாகப் போராடிவருகிறது. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ’காவிரி நீர் மேலாண்மை வாரியம்’ அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன் பிறகும் நீண்ட போராட்டத்தில் ஏற்பட்ட நிர்பந்தம் காரணமாக மத்திய அரசு ’காவிரி நீர் மேலாண்மை ஆணையம்’ அமைத்தது.
இதன் செயல்பாடு அரசியல் சட்ட அடிப்படையில் தன்னாட்சி அதிகாரம் பெற்றதாக அமைய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு வலியுறுத்திவரும் நிலையில், மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசின் நீர் ஆற்றல் அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஒரு பிரிவு அலுவலகமாக இணைத்திருப்பது தமிழ்நாட்டின் காவிரி நதி நீர் உரிமையை நிரந்தரமாக பறித்துக் கொள்ளும் மத்திய பாஜக அரசின் துரோகச் செயலாகும்.
தமிழ்நாடு மக்களைத் தொடர்ந்து வஞ்சித்துவரும் மத்திய அரசின் அத்துமீறல் நடவடிக்கைகளைத் தடுக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்க மத்திய அரசு சூழ்ச்சி - விவசாயிகள் சங்கம்