ETV Bharat / city

"கோவிஷீல்டு" தடுப்பூசி பரிசோதனையால் பாதிப்பு: நஷ்டஈடு கேட்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு வக்கீல் நேட்டீஸ்!

"கோவிஷீல்டு" தடுப்பூசி பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டதால் கடுமையான உடல் நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தனக்கு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு சென்னையை சேர்ந்த நபர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

CowShield Vaccine
CowShield Vaccine
author img

By

Published : Nov 29, 2020, 2:11 AM IST

சென்னை: உலகத்திற்கே அச்சுறுத்தலாகவும், பெரும் சவாலாகவும் இருக்கும் கரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கரோனா தொற்றுக்கான தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது.

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் செயல்பட்டு வரும் "சீரம்" ஆராய்ச்சி நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள, கரோனா தடுப்பூசியை, "கோவிஷீல்டு" என்ற பெயரில், பிரிட்டனின் 'ஆஸ்ட்ரா ஜெனகா' என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சீரம் இன்ஸ்டிடியூட் சென்று இந்த தடுப்பூசி நிலை குறித்து கேட்டறிந்தார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த தடுப்பூசி பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மனிதர்களிடம் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் கரோனா தடுப்பூசியை, மனிதர்களிடம் பரிசோதிப்பதற்கான அனுமதியை சீரம் நிறுவனம் பெற்றுள்ளது.

கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு பயன்படுத்தும் வகையில், பல்வேறு மாநிலங்களில் சுய விருப்பத்தின் பேரில் தன்னார்வலர்களுக்கு, சோதனை அடிப்படையில் ஊசி மருந்து போடப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறன.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ராமசந்திரா மருத்துவமனை மூலம் இந்த கோவிஷீல்டு தடுப்பூசி மனிதர்களிடம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொண்ட சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 40 வயதான ஒருவர், இந்தத் தடுப்பூசியால் தான் கடுமையான உடல் உபாதைகள் மற்றும் மனரீதியான பிரச்னையை சந்தித்துள்ளதாகவும், இதனால் தன் பாதிப்புக்கு நஷ்ட ஈடு கேட்டு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், சீரம் இன்ஸ்ட்டிடியூட், ராமச்சந்திரா மருத்துவமனை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த தடுப்பூசி பாதுகாப்பானது இல்லை என்பதால், தடுப்பூசியை மேற்கொண்டு பரிசோதிப்பதையோ, உற்பத்தி செய்வதையோ, விநியோகிப்பதையோ உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடரந்து, தடுப்பூசி பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொண்ட நபருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டால், உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட போதும், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்போ, சீரம் இன்ஸ்டிடியூட்டோ, ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனமோ, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமோ தன்னை கண்டு கொள்ளவில்லை, தான் சந்தித்த பிரச்னைகள் குறித்து கேட்க தொடர்பு கொள்ளவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தான் கடுமையான உடல் உபாதைகள் மற்றும் மூளை வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மறைத்தும், அதுகுறித்து கண்டு கொள்ளாமலும் தொடர்ந்து பரிசோதனையைத் தொடர்வது, மனித சமூகத்திற்கு எதிரான குற்றம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், தன்னுடை பாதிப்புகளுக்கு, 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும் என்றும், தடுப்பூசி பரிசோதனையே மனிதர்களிடம் தொடர்வதையும், தடுப்பூசி தயாரிப்பதையும், விநியோகிப்பதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், சீரம் இன்ஸ்ட்டிடியூட், இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை இயக்குனர், ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனம், தடுப்பூசிக்கு தலைமை தாங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆண்ட்ரூ பொல்லார்ட், ராமச்சந்திரா மருத்துவமனை ஆகியோருக்கு பாதிக்கப்பட்ட நபர் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கரோனா தடுப்பூசி பரிசோதனை மனிதர்களுக்கு நடத்தப்பட்டுவரும் நிலையில் இந்த குற்றச்சாட்டு, தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: முகக் கவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.