சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி மருந்து சேமிப்பு குளிர்பதன கிடங்கிலிருந்து 10 மண்டல சேமிப்பு கிடங்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்களை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.
இந்தத் தடுப்பூசிகள் 47 சுகாதார மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,704 குளிர்பதன தொடர் நிலையங்களுக்கு அனுப்பப்படும்.
அதன்படி, சென்னை மண்டலத்திற்கு ஒரு லட்சத்து 18 ஆயிரம் மருந்துகளும், கடலூர் மண்டலத்திற்கு 25,500 மருந்துகளும், திருச்சிக்கு 40,200 மருந்துகளும், தஞ்சை மண்டலத்திற்கு 28,600 மருந்துகளும், மதுரைக்கு 54,100 மருந்துகளும், சிவகங்கை மண்டலத்திற்கு 19,000 மருந்துகளும், நெல்லைக்கு 51,700 மருந்துகளும், வேலூருக்கு 42,100 மருந்துகளும், சேலத்திற்கு 59,800 மருந்துகளும், கோயம்புத்தூருக்கு 73,200 மருந்துகளும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
சென்னை மண்டலம்
சென்னை மாநகராட்சி - 63,700
பூந்தமல்லி - 5,800
செங்கல்பட்டு - 23,200
திருவள்ளூர் - 13,800
காஞ்சிபுரம் - 10,900
கடலூர் மண்டலம்
கடலூர் - 7,800
விழுப்புரம் - 11,500
கள்ளக்குறிச்சி - 6,200
திருச்சி மண்டலம்
திருச்சி - 17,100
அரியலூர் - 3,300
பெரம்பலூர் - 5,100
அறந்தாங்கி - 3,100
புதுக்கோட்டை - 3,800
கரூர் - 7,800
தஞ்சாவூர் மண்டலம்
தஞ்சாவூர் - 15,500
திருவாரூர் - 6,700
நாகப்பட்டினம் - 6,400
மதுரை மண்டலம்
மதுரை - 23,100
திண்டுக்கல் - 7,300
பழனி - 5,800
சிவகாசி - 6,400
விருதுநகர் - 3,300
தேனி - 8,200
சிவகங்கை மண்டலம்
சிவகங்கை - 10,700
பரமகுடி - 3,600
ராமநாதபுரம் - 4,700
திருநெல்வேலி மண்டலம்
திருநெல்வேலி - 10,900
கோவில்பட்டி - 3,800
கன்னியாகுமரி - 22,600
தென்காசி - 5,100
தூத்துக்குடி - 9,300
வேலூர் மண்டலம்
வேலூர் - 18,600
ரானிப்பேட்டை - 4,400
திருப்பத்தூர் - 4,700
திருவண்ணாமலை - 10,000
செய்யார் - 4,400
சேலம் மண்டலம்
சேலம் - 22,900
ஆத்தூர் - 4,900
நாமக்கல் - 8,700
தர்மபுரி - 11,800
கிருஷ்ணகிரி - 11,500
கோயம்புத்தூர் மண்டலம்
கோயம்புத்தூர் - 40,600
ஈரோடு - 13,800
திருப்பூர் - 13,500
நீலகிரி - 5,300
இதையும் படிங்க: அனுமதியளிக்கப்பட்டும் கரோனா தடுப்பூசி போட தயக்கம் காட்டும் இந்தியர்கள்!