ETV Bharat / city

புனேவில் இருந்து சென்னை வந்த கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள்

புனேவில் இருந்து 3 லட்சத்து 60 ஆயிரத்து 130 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தது.

கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தது

author img

By

Published : Jun 24, 2021, 4:58 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது.

அந்தவகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மக்களுக்கு போட தடுப்பூசிகள் இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டன. இதனால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது.

இந்நிலையில் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 31 பார்சல்களில் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரத்து 130 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தன.

இதில் தமிழ்நாடு அரசுக்கு 27 பார்சல்களில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 130 கோவிஷீல்டு தடுப்பூசிகளை சுகாதாரத் துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டுசென்றனர்.

அதேபோல் மத்திய தொகுப்பிலிருந்து வந்த நான்கு பார்சல்களில் 48 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.