ETV Bharat / city

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கா? - ஸ்டாலின் தீவிர ஆலோசனை - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊரடங்கு அறிவிப்பு

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (டிசம்பர் 24) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

author img

By

Published : Dec 24, 2021, 1:53 PM IST

ஒமைக்ரான் தொற்று அதி தீவிரமாகப் பரவிவரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு விதித்தல், கரோனா தொற்று கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குதல் குறித்து மத்திய அரசு மாநில தலைமைச் செயலர்களுக்கு அண்மையில் அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் ஊரடங்கு அறிவிப்பு வெளியாகுமா என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துவந்தன.

ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என வலியுறுத்திவந்தனர். இந்தச் சூழலில் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொற்றுப் பரவல் குறித்தும், மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது.

இக்கூட்டத்தில், மருத்துவத் துறை வல்லுநர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: உ.பி.யில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.