ETV Bharat / city

பைக் ரேஸ்... கூலித் தொழிலாளியை கொன்ற இளைஞருக்கு 41 லட்சம் அபராதம் ... - Madras high court

சென்னையில் பைக் ரேஸின் போது கூலித் தொழிலாளியை கொன்ற இளைஞருக்கு 41 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 28, 2022, 9:48 AM IST

சென்னை: சென்னை பாலவக்கத்தை சேர்ந்தவர் பிளம்பர் தொழிலாளி ஜோசப். இவர், அவரது நண்பருடன் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிகாலையில் டீக்கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது, நீலாங்கரையிலிருந்து திருவான்மியூர் நோக்கி நான்கு இளைஞர்கள் பைக் ரேஸ் சென்றுள்ளனர். அதில் சூளைமேட்டை சேர்ந்த தினேஷ்குமார் ஓட்டி வந்த கேடிஎம் மோட்டார் பைக் மோதி, ஜோசப் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ஜோசப்பின் மரணத்திற்கு 22 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி அவரது தாய் ஸ்டெல்லாவும், மனைவி சத்தியபிரியாவும் இணைந்து, சென்னை மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி டி. சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பைக் ஓட்டி வந்த தினேஷ் குமாருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும், வாகனத்திற்கு காப்பீடு செய்யப்படவில்லை என்றும் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஜோசப்பின் மரணத்திற்கு 41 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என பைக் உரிமையாளர் சங்கருக்கும், அதை ஓட்டி வந்த அவரது மகன் தினேஷ் குமாருக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தொகையை இருவரும் இணைந்து மூன்று மாதத்திற்குள் ஜோசப்பின் தாய், மனைவிக்கு வழங்க வேண்டும் என ஆணையிட்டார்.

இதையும் படிங்க: பிஎப்ஐ அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடை - மத்திய அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.