ETV Bharat / city

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிப்பு - school teacher promotion

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

counseling-of-teachers-promotion-in-tamilnadu

author img

By

Published : Jul 1, 2022, 2:27 PM IST

சென்னை: இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பானையில், "பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு ஜூலை 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

அந்த வகையில், அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 11ஆம் தேதியும், அரசு, நகராட்சி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 12ஆம் தேதியும், அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 13ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 14, 15ஆம் தேதிகளிலும் நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும்" என்று குறிப்பிப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.