உலகையே அச்சுறுத்தும் கரோனா தமிழ்நாட்டில் சற்று குறைந்துவரும் நிலையில், சென்னையில் மட்டும் தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் 94 பேருக்கு சென்னையில் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 767 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் பூ வியாபாரி, சுமைத்தூக்கும் தொழிலாளர், உள்ளிட்ட எட்டு பேருக்கும் அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கோயம்பேடு சந்தைப் பகுதியில், மாநகராட்சி சார்பில் நடமாடும் கரோனா கண்டறிதல் மையம் மூலம், அனைத்து வியாபாரிகளுக்கும் தீநுண்மி பரிசோதனை நடத்தப்பட்டது.
தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காததாலும், கரோனா தொற்று அதிகரித்ததாலும், கோயம்பேடு சந்தையில் சில்லறை வியாபாரத்திற்குத் தடைவிதிக்கப்பட்டதுடன், பூ, பழக்கடைகள் மாதவரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரயில் மூலம் உணவு தானியங்கள்; முன்னணியில் தமிழ்நாடு!