ETV Bharat / city

மார்ச் 1 முதல் முதியோருக்கு கரோனா தடுப்பூசி! - அமைச்சர் விஜயபாஸ்கர் - முதியோருக்கு கரோனா தடுப்பூசி

சென்னை: மார்ச் 1 ஆம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

vijayabaskar
vijayabaskar
author img

By

Published : Feb 26, 2021, 1:03 PM IST

Updated : Aug 9, 2022, 7:29 PM IST

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”21,000 மாணவ-மாணவிகளுக்கு பட்டமளிக்கும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தமிழக சுகாதாரத்துறையை மனம் திறந்து பாராட்டினார். கரோனா காலத்தில் தமிழகத்தில் மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டதாக அவர் கூறியது பெருமையாக உள்ளது.

தமிழகத்தில் இரண்டாவது அலை வரக்கூடாது என்பதற்கான அனைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, சுகாதாரத்துறை மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகிறது. அதன்படி, வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரம், பணி நிமித்தமாக வந்து 72 மணி நேரம் வரை இருப்பவர்களுக்கு எந்த பரிசோதனையும் தேவையில்லை. அதே நேரம், தொடர்ந்து தங்கி இருந்தால், அவர்கள் ஏழு நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து அவர்களுக்குரிய வழிகாட்டுதல்களை வழங்கும்.

தமிழகத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கரோனா தடுப்பூசி வழங்க உள்ளோம். தமிழகத்தில் ஒரு கோடியே 60 லட்சம் முதியவர்கள் உள்ளனர். மத்திய அரசு வழிகாட்டுதலின்படி 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமின்றி தடுப்பூசி வழங்கப்படும். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் கட்டாயமாக அணிய வேண்டும். அண்டை மாநிலங்களில் இரண்டாம் அலை போன்ற சூழல் உருவாகியுள்ளதால்தான், அனைவரும் முகக்கவசம் அணிய தொடர்ந்து கூறுகிறோம்.

இதையும் படிங்க: 'மீன் உணவுத் திருவிழா' - இன்றுமுதல் தொடக்கம்

Last Updated : Aug 9, 2022, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.