ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 40 பேருக்கு கரோனா பாதிப்பு - Xe வைரஸ் பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 40 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு
author img

By

Published : May 2, 2022, 10:50 PM IST

சென்னை: பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று மே.02ஆம் தேதி வெளியிட்டுள்ள தகவலில், ’தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 15 ஆயிரத்து 440 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாட்டில் மேலும், புதிதாக 40 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஆறு கோடியே 50 லட்சத்து 25 ஆயிரத்து 73 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் 34 லட்சத்து 54 ஆயிரத்து 19 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 505 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 49 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 489 என உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் 27 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 7 நபர்களுக்கும் கோயம்புத்தூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு நபர்களுக்கும் ஈரோடு, புதுக்கோட்டை, திருவள்ளூர், திருச்சி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபருக்கு என 40 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனாவிற்கு புதிய மருந்து நல்ல செய்தியை வெளியிட்ட சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.