செங்கல்பட்டு: அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது. இந்த கல்லூரியில் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்த நிலையில், மே 3ஆம் தேதி 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் அவர்களுடன் தொடர்பிலிருந்த மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அந்த வகையில், நேற்று தொற்று எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. இதையடுத்து மகளிர் விடுதியில் உள்ள 7 பணியாளர்கள், 34 நர்சிங் மாணவிகள், 355 மருத்துவ மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல், ஆண்கள் விடுதியில் பணியாளர்கள், மாணவர்கள் என மொத்தம் 927 பேருக்கு பரிசோதனை மெற்கொள்ளப்பட்டது.
இதில் இன்று மேலும் 42 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அந்த வகையில் தொற்று எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாம் நாளாக கல்லூரிக்கு நேரில் சென்ற மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று தொற்றுப் பரவல் நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 10,663 குழந்தைகளுக்கு நிதியுதவி