இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள கரோனா வைரஸ் கண்காணிப்பு குறித்த தகவலில், தமிழ்நாட்டில் இரண்டு லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 94 ஆயிரத்து 281 பேர் கடந்த 14ஆம் தேதிவரை வீட்டில் 28 நாள்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்தனர்.
அவர்களில் 28 நாள்கள் தொடர் கண்காணிப்பினை 15ஆம் தேதிவரை 72 ஆயிரத்து 326 பேர் முடித்துள்ளனர். தற்போது 34 ஆயிரத்து 841 பேர் 28 நாள்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் தொற்று அதிக அளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 107 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு அரசு கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் விமான நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் தனி வார்டில் ஆயிரத்து 876 பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்துவருகின்றனர். 21 ஆயிரத்து 994 பேரின் ரத்தப் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டன.
இவர்களில் ஆயிரத்து 242 பேருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 15 ஆயிரத்து 210 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆயிரத்து 383 நபர்களின் ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனை ஆய்வகங்களில் ஆய்வு செய்யப்பட்டுவருகின்றன.
நான்காயிரத்து 159 பேருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரேநாளில் 38 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
118 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். சமய மாநாட்டில் கலந்துகொண்டவர்களிடமிருந்து கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் 14ஆம் தேதிவரை ஆயிரத்து 79 பேருக்கும், 15ஆம் தேதிவரை 34 பேருக்கும் என ஆயிரத்து 113 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
சிகிச்சைப் பலனளிக்காமல் 14 பேர் இறந்துள்ளனர். மேலும் தீவிர செயற்கை சுவாசம் அளிப்பதற்கான வென்ட்டிலேட்டர் மூன்றாயிரத்து 371-உம், 29 ஆயிரத்து 74 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகளும் தயார் நிலையில் உள்ளன.
மேலும் 15ஆம் தேதி நடத்தப்பட்ட ரத்த பரிசோதனை முடிவுகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்று பேருக்கும், சென்னை மாவட்டத்தில் 5 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் ஆறு பேருக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏழு பேருக்கும், சேலம் மாவட்டத்தில் மூன்று பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் ஒருவருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருவருக்கும், தேனி மாவட்டத்தில் ஒருவருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஏழு பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு பேருக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருவருக்கும், வேலூர் மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
கரோனா தொற்று உறுதியாகியுள்ள 34 மாவட்டங்களின் நிலவரம்:
சென்னை மாவட்டம் 214
கோயம்புத்தூர் மாவட்டம் 126
திருப்பூர் மாவட்டம் 79
ஈரோடு மாவட்டம் 70
திண்டுக்கல் மாவட்டம் 65
திருநெல்வேலி மாவட்டம் 57
செங்கல்பட்டு மாவட்டம் 50
நாமக்கல் மாவட்டம் 45
திருச்சிராப்பள்ளி மாவட்டம் 43
கரூர் மாவட்டம் 41
மதுரை மாவட்டம் 41
தேனி மாவட்டம் 41
திருவள்ளூர் மாவட்டம் 40
ராணிப்பேட்டை மாவட்டம் 39
நாகப்பட்டினம் மாவட்டம் 38
தூத்துக்குடி மாவட்டம் 26
விழுப்புரம் மாவட்டம் 23
சேலம் மாவட்டம் 22
கடலூர் மாவட்டம் 20
விருதுநகர் மாவட்டம் 17
திருப்பத்தூர் மாவட்டம் 17
தஞ்சாவூர் மாவட்டம் 17
திருவாரூர் மாவட்டம் 17
கன்னியாகுமரி மாவட்டம் 16
வேலூர் மாவட்டம் 16
திருவண்ணாமலை மாவட்டம் 12
சிவகங்கை மாவட்டம் 11
நீலகிரி மாவட்டம் 9
தென்காசி மாவட்டம் 9
காஞ்சிபுரம் மாவட்டம் 8
ராமநாதபுரம் மாவட்டம் 7
கள்ளக்குறிச்சி மாவட்டம் 3
அரியலூர் மாவட்டம் 2
பெரம்பலூர் மாவட்டம் 1