சென்னை: தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரத்தில் சிகிச்சைபெற்று வருபவர்களில் எண்ணிக்கை பூஜ்யமாக உள்ளது.
சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் சில மண்டலங்களில் கரோனா தொற்றின் பாதிப்பு சற்று உயர்கிறது. இருந்தபோதிலும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் 150-க்கும் குறைவாகவே உள்ளது.
கரோனா ஹாட்ஸ்பாட் என்று அழைக்கப்பட்ட ராயபுரத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து தற்போது சிகிச்சைபெற்று வருபவர்களில் எண்ணிக்கை பூஜ்யமாக உள்ளது. வைரஸ் பரவும் பகுதியில், தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்களை நடத்துவது, மக்களுக்குத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இதற்கிடையில் மண்டல வாரியான சிகிச்சை பெற்றுவருபவர்களின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அது வருமாறு,
எண் | பகுதி | பாதிப்பு |
01 | கோடம்பாக்கம் | 183 |
02 | அண்ணா நகர் | 163 |
03 | ராயபுரம் | 00 |
04 | தேனாம்பேட்டை | 165 |
05 | தண்டையார்பேட்டை | 00 |
06 | திரு.வி.க. நகர் | 154 |
07 | அடையாறு | 147 |
08 | வளசரவாக்கம் | 134 |
09 | அம்பத்தூர் | 116 |
10 | திருவொற்றியூர் | 36 |
11 | மாதவரம் | 43 |
12 | ஆலந்தூர் | 109 |
13 | சோழிங்கநல்லூர் | 38 |
14 | பெருங்குடி | 88 |
15 | மணலி | 25 |
இதுவரையிலும் இரண்டு லட்சத்து 31 ஆயிரத்து 148 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு லட்சத்து 25 ஆயிரத்து 487 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள ஆயிரத்து 563 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட 4,098 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : கோவிட்-19 நிலவரம்: ஒரே நாளில் 13,083 பேருக்கு பாதிப்பு