ETV Bharat / city

ஆடல் பாடலுடன் நடந்த கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி - டிஜிபி சந்தீப் ராய்

சென்னையில் பொதுமக்களுக்கு காவல் துறையினர் ஆடலுடன் பாடல், நாடகம் ஆகியவை மூலம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
author img

By

Published : Aug 20, 2021, 6:12 PM IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறை சார்பில் ரயில் பயணிகளுக்கு கரோனா தொற்று சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ரயில்வே காவல் துறை பொறுப்பு கூடுதல் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ரயில்வே காவல் துறை, ரயில்வே பாதுகாப்புப் படையின் மகளிர் காவல் துறையினர் ஆடல் பாடலுடனும், நாடக நிகழ்ச்சி மூலமாகவும் பயணிகளுக்குக் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கரோனா விழிப்புணர்வு

அதன் தொடர்ச்சியாக சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை கூடுதல் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உடனிணைந்து ரயில்வே காவல் துறை ஐ.ஜி கல்பனா நாயக், ரயில்வே காவல் துறை டிஐஜி ஜெயகவுரி ஆகியோர் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், “ரயில் நிலையத்திற்கு வரும்போது பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து உரிய கரோனா வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அரசின் அறிவுறுத்தலின்படி கரோனா விழிப்புணர்வை ரயில்வே காவல் துறை நடத்தி வருகிறது.

ரயில்வே துறையில் காலிப் பணியிடங்கள்

தமிழ்நாட்டிலுள்ள 47 இருப்புப் பாதை காவல் நிலையங்கள் உள்ள ரயில் நிலையங்களிலும் வரும் ஐந்து நாள்களுக்கு இந்த விழிப்புணர்வை நடத்தவுள்ளோம்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் “ரயில்வே காவல் துறையில் காலி பணியிடங்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

தற்போது பயிற்சியில் உள்ளவர்கள் பயிற்சி முடித்து வரும்போது காவலர்களின் பற்றாக்குறை குறையும். அதுவரை தமிழ்நாடு காவல் துறையின் காவலர்கள் மூலம் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

இதையும் படிங்க: வடிவேலு கெட்டப்பில் கரோனா விழிப்புணர்வு - அசத்தும் கிராமியக் கலைஞர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.