சென்னை: மக்கள் நல்வாழ்வுத் துறை ஜூலை 2ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 159 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த 4,221 நபர்களுக்கும், கர்நாடகாவிலிருந்து வந்த ஐந்து நபர்களுக்கும், பிகார், ஜார்கண்ட், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வந்த தலா ஒருவருக்கும் என 4,230 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை மூன்று கோடியே 23 லட்சத்து 18 ஆயிரத்து 85 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 24 லட்சத்து 88 ஆயிரத்து 407 நபர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 36 ஆயிரத்து 707 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
குணமடைந்தவர்கள்
மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் நான்காயிரத்து 952 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 18 ஆயிரத்து 822 என உயர்ந்துள்ளது.
மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் தனியார் மருத்துமனைகளில் 23 பேரும், அரசு மருத்துவமனைகளில் 74 பேரும் என 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 818 என உயர்ந்துள்ளது.
மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 5,32,992
கோயம்புத்தூர் - 2,20,493
செங்கல்பட்டு - 1,57,280
திருவள்ளூர் - 1,11,236
சேலம் - 88,561
திருப்பூர் - 83,046
ஈரோடு - 90,183
மதுரை - 72,460
காஞ்சிபுரம் - 70,410
திருச்சி - 69,661
தஞ்சாவூர் - 64,025
கன்னியாகுமரி - 59,113
கடலூர் - 58,176
தூத்துக்குடி - 54,457
திருநெல்வேலி - 47,267
திருவண்ணாமலை - 49,699
வேலூர் - 46,998
விருதுநகர் - 44,669
தேனி - 42,419
விழுப்புரம் - 42,603
நாமக்கல் - 44,943
ராணிப்பேட்டை - 41031
கிருஷ்ணகிரி - 40,082
திருவாரூர் - 36,948
திண்டுக்கல் - 31,697
புதுக்கோட்டை - 27,123
திருப்பத்தூர் - 27,615
தென்காசி - 26,438
நீலகிரி - 28,527
கள்ளக்குறிச்சி - 27,292
தருமபுரி - 24,703
கரூர் - 22,128
மயிலாடுதுறை - 20,213
ராமநாதபுரம் - 19,665
நாகப்பட்டினம் - 17,852
சிவகங்கை - 17,813
அரியலூர் - 14,965
பெரம்பலூர் - 11,116
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,005
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075
ரயில் மூலம் வந்தவர்கள் - 428