ETV Bharat / city

காலை 1 மணி நேரம், மாலை 1 மணி நேரம் - மீறினால் நடவடிக்கை! - cop

சென்னை: தீபாவளியன்று அரசு அறிவித்த 2 மணி நேரம் தவிர்த்து பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

interest
interest
author img

By

Published : Nov 7, 2020, 2:19 PM IST

தியாகராய நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை, காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பார்வையிட்டு கண்காணிப்பு கேமரா மையம், சேவை மையங்கள் ஆகியவற்றை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” தி.நகர் மார்க்கெட் பகுதிகளில் ஏற்கனவே உள்ள 200 கேமராக்களுடன் கூடுதலாக 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற நிகழ்வுகளில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க முடியும்.

அசம்பாவிதங்களை தவிர்க்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் 2 ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும். கரோனா காலம் என்பதால் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 10 விழிப்புணர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளி கடைபிடிப்பதை உறுதி செய்ய, வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 500 கூடுதல் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

காலை 1 மணி நேரம், மாலை 1 மணி நேரம் - மீறினால் நடவடிக்கை!

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அருகமை பள்ளிகளில் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனினும் கரோனா காலம் என்பதால், அரசு அறிவித்த காலை 1 மணி நேரம், மாலை 1 மணி நேரம் தவிர்த்து பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ” என எச்சரித்தார்.

இதையும் படிங்க: சென்னை விமானநிலையத்தில் பள்ளி முதல்வரிடம் துப்பாக்கி குண்டு பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.