சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, "6000-க்கும் மேற்பட்ட நியாயவிலைக்கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. மேலும் 700-க்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகள், பகுதிநேர நியாயவிலைக் கடைகளாக செயல்பட்டுவருகின்றன.
இந்நிலையில் ஆண்டுக்கு 500 நியாயவிலைக்கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, ஊரக வளர்ச்சித்துறை போன்ற துறைகளிடம் போதிய நிதி பெற்று சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநரைத் தாக்க இது அதிமுக அரசு அல்ல - சட்டப்பேரவையில் ஸ்டாலின்