ETV Bharat / city

மருத்துவர்கள் மீதான புகார்களை ஆறு மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு - Chennai high court

மருத்துவர்கள் மீதான புகார்களை ஆறு மாதங்களுக்குள் முடிப்பது தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டுமென, தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Oct 26, 2021, 8:48 PM IST

சென்னை: மலர் மருத்துவமனையில் பிச்சுமணி என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி அக்டோபர் 11ஆம் தேதி உயிரிழந்தார்.

இதனிடையே தன் தந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கோவையைச் சேர்ந்த மருத்துவர் ராதாகிருஷ்ணன் போலியாக மருத்துவத் தகுதி சான்று கொடுத்து, அவருடைய மருமகன் பெயரில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைப் பதிவு செய்ததாக உயிரிழந்த பிச்சுமணியின் மகள் ஸ்ரீசுபிதா தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரில் விசாரணைக்கு சாட்சி சொல்வதற்காக, மருத்துவமனையின் முதன்மை மருத்துவ ஆலோசகராக இருந்த பிச்சுமணியை அழைத்து, அவரின் மருத்துவர் பதிவை ஆறு மாதங்களுக்குத் தற்காலிகமாக நீக்கிய மருத்துவக் கவுன்சில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது.

மருத்துவர் பதிவை ரத்து செய்த உத்தரவு செல்லாது

இந்த உத்தரவை எதிர்த்து பிச்சுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிபதி ஆர். மகாதேவன் விசாரித்து தீர்ப்பளித்துள்ளார். அப்போது பிச்சுமணிக்கு எதிராக மருத்துவக் கவுன்சிலில் புகார் அளிக்கப்படவில்லை என்றும், சாட்சியமளிக்க மட்டுமே சென்ற நிலையில், தவறான தகவல் தெரிவித்ததாக கூறி, அவருக்கு விளக்கம் அளிக்கக்கூட வாய்ப்பளிக்காமல் மருத்துவர் பதிவை ரத்து செய்த உத்தரவு செல்லாது எனத் தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், இந்திய மருத்துவக் கவுன்சில் என்பது தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றப்பட்ட பிறகும், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான புதிய விதிகள் வகுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். நடவடிக்கை எடுப்பதற்கான விதிமுறைகளை வகுக்க வேண்டுமெனவும், மருத்துவர்களுக்கு எதிராக புகார் வந்தால் சம்பந்தப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் பெற்று, விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை மருத்துவக் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

ஆறு மாதங்களில் வழக்கை முடிக்க உத்தரவு

அந்தக் குழு சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் விளக்கம் கேட்டு முடிவெடுக்கும் வகையில், மூன்று நபர்கள் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும், மருத்துவர்களுக்கு எதிராக எந்த ஒரு புகாராக இருந்தாலும் ஆறு மாதங்களில் விசாரணை முடிக்கும் வகையில் அக்குழுவிற்கு அதிகாரம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், புகார் தொடர்பான மருத்துவ ஆவணங்களை மூன்று ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும் என்ற கால வரையறையை 10 ஆண்டுகளாக நீட்டித்தும் நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சாட்சியமே போதும் - உயர் நீதிமன்றம் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.